ரெமோ படத்தையடுத்து விஜய்யுடன் நடித்த பைரவா படம் தனக்கு தமிழில் உச்ச நடிகை அந்தஸ்தை பெற்றுக்கொடுக்கும் என்பதுதான் கீர்த்தி
சுரேஷின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அந்த படம் அவரை ஏமாற்றி விட்டது. அதனால் தற்போது அவரது கவனம் தெலுங்கு பக்கம் திரும்பியுள்ளது. சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிப்பவர், தெலுங்கில் மூன்று படங்களில் நடிக்கிறார்.
ஏற்கனவே அவர் நடித்த நீனுலோக்கல் வெற்றி பெற்றதால், இப்போது மூன்று மெகா படங்களில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதோடு சாவித்ரி வாழ்க்கை கதையில் உருவாகும் மகாநதி படத்தில் சாவித்ரியாக நடிப்பதை அடுத்து, அவரது சம்பளமும் ரூ. 3 கோடியாக உயர்ந்து நிற்கிறதாம். அதனால் தெலுங்கில் இன்னும் பெரிய இடத்தை பிடித்துவிடவேண்டும் என்று ஐதராபாத்திலேயே முகாமிட்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், சமந்தா, ராகுல்பிரீத்சிங் உள்ளிட்ட சில நடிகைகள் முதலில் தமிழில் நடித்து சரியான லிப்ட் கிடைக்காமல் தெலுங்கில் பிரபலமாகி பின்னர் தமிழுக்கு வந்தது போன்று, தானும் தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பிறகு இனிமேல் தமிழில் கூடுதல் கவனம் செலுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்.

கருத்துரையிடுக