நர்ஸ் வேடத்தில் கலக்கும் மகிமா

சாட்டை படத்தில் அறிமுகமான மகிமா நம்பியார் இப்போது பிசியான நடிகை. அதுவும் குற்றம் 23 படத்திற்கு பிறகு அவரது கேரியர் சற்று உயர்ந்திருக்கிறது. அகத்தினை, ஐங்கரன், கிட்னா
என கை நிறைய படம் வைத்திருக்கிறார். இந்த நிலையில் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் அருள்நிதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லிபாபு தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் மு.மாறன் இயக்குகிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார், அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். மகிமா நம்பியாரை தேர்வு செய்தது பற்றி இயக்குனர் மு.மாறன் கூறியதாவது:

நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் உன்னதமான கலைஞர் அருள்நிதி. எனவே ஏறக்குறைய அதே குணங்கள் நிறைந்த ஒருவரை தான் எங்கள் படத்தின் கதாநாயகியாக தேர்வு செய்ய வேண்டும் என்று கருதி, நாங்கள் மகிமா நம்பியாரை ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர் இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகன், கதாநாயகி என இருவரையும் சார்ந்து நகரும் இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி அன்று துவங்க இருக்கின்றோம்" என்கிறார் மு.மாறன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget