எனக்கு அப்படி நடிக்க ஆசை நிகிலா

சசிகுமார் நடித்த வெற்றிவேல், கிடாரி படங்களில் நடித்தவர் நிகிலா விமல். கேரளத்து நடிகையான இவர், அதற்கு முன்பே மா.கா.பா.ஆனந்துடன் பஞ்சுமிட்டாய் என்ற படத்தில் நாயகியாக
நடித்திருந்தார்.அந்த படம் இப்போதுதான் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது சிபிராஜ் நடிக்கும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கும் நிகிலா, கிளாமருக்கு முழு தடை விதித்து நடித்து வருவதாக கோலிவுட்டில் செய்தி பரவியுள்ளது.

இதுகுறித்து நிகிலாவை தொடர்புகொண்டு கேட்டபோது, என்னைப்பொறுத்த வரை கதைகளை ஒருபோதும் நான் கிளாமர், ஹோம்லி என்று தரம் பிரிப்பதில்லை. அதோடு, இதுவரை என்னிடம் கிளாமராக நடிக்க வேண்டும் என்று எந்த இயக்குனரும் கேட்டதுமில்லை. என்னைத்தேடி வந்ததெல்லாமே ஹோம்லியான வேடங்கள்தான். மேலும், எனக்கும் கிளாமர் கலந்த கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைதான். கிளாமர் என்று வரும்போது முகம் சுழிக்காத கிளாமரை வெளிப் படுத்தி நடிப்பேன் என்கிறார் நிகிலா விமல்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget