நடிப்புக்கு டாட்டா காட்டிய லட்சுமி

வேந்தர் தொலைக்காட்சியில் ஏழாம் உயிர் தொடரின் நாயகி லட்சுமி விஸ்வநாத். மலையாள தொடர்கள் மூலம் தமிழுக்கு வந்தவர். சமீபத்தில்
திருமணம் செய்து கொண்ட இவர் நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்தார். இடைவெளிக்கு பிறகு நடிக்க முடிவு செய்திருந்தவர் இப்போது அந்த முடிவை கைவிட்டுவிட்டு கல்லூரி மாணவியாகிவிட்டார்.

எர்ணாகுளம் மகளிர் கல்லூரியில் சேர்ந்து எம்.ஏ., ஆங்கில படிக்கிறார். எர்ணாகுளம் தான் லட்சுமியின் சொந்த ஊர். "திருமணத்திற்காக நடிப்புக்கு குட்பை சொன்னேன். நடிப்பை போலவே படிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்தபோது பெற்றோர்களும், கணவரும் எம்.ஏ. படிச்சு முடிச்சுடுன்னு சொன்னாங்க. அதனால் கல்லூரிக்கு கிளம்பி விட்டேன். மீண்டும் நடிப்பது குறித்து படிப்பு முடிந்ததும் தான் முடிவெடுக்க முடியும்" என்கிறார் லட்சுமி விஸ்வநாத்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget