சின்னத்திரை நாயகி வரதா

சுல்தான், மகன்டே அச்சன், உத்தரா ஸ்வயம்வரம் உள்ளிட்ட பல மலையாளப் படங்களில் நடித்தவர் வரதா. சினிமா வாய்ப்புகள் இல்லாததால்
சின்னத்திரைக்கு வந்தார். தற்போது மலையாள சின்னத்திரையின் முன்னணி நடிகையாகிவிட்டார். மழவில் மனோரமா சேனலில் ஒளிபரப்பான அமலா என்ற தொடர் அவருக்கு சின்னத்திரையில் பெரிய இடத்தை பெற்றுக் கொடுத்தது. தற்போது பிரணயம் தொடரில் நடித்து வருகிறார்.

என்றாலும் வரதாவிற்கு தமிழ் சீரியலில் நடிக்க வேண்டும் என்கிற கனவு இருக்கிறது. இதற்கு முன் அவர் காதலிக்கலாமா என்ற தமிழ் படத்தில் நடித்தார். அந்தப் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார். இதற்கான முயற்சிகளை முடுக்கி விட்டிருக்கிறார்.

"சினிமா வாய்ப்பு நன்றாக கிடைத்தபோதே சின்னத்திரைக்கு வந்தேன். அது எனக்கு பிடித்திருந்தது. தமிழ் சினிமாவில் நடிக்கும் ஆசை எப்போதும் உண்டு. சில முயற்சிகள் சரியாக அமையவில்லை. நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். சின்னத்திரையாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் ஓகே" என்கிறார் வரதா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget