புன்னகை அரசி அஞ்சலிராவ்

கே.ஆர்.விஜயாவை புன்னகை அரசி என்பார்கள். சினேகாவை புன்னகை இளவரசி என்பார்கள். ஆனால் புன்னகை அரசி பட்டத்தோடு நடிக்க
வந்திருப்பவர் அஞ்சலிராவ். 2014ம் ஆண்டு நடந்த தென்னிந்திய அழகிப் போட்டியில் சிறந்த புன்னகை அரசி என்ற டைட்டில் வென்றவர் அஞ்சலிராவ்.

தற்போது பீச்சாங்கை என்ற படத்தின் மூலம் சோலோ ஹீரோயின் ஆகியிருக்கிறார். இதற்கு முன்பு வன்மம் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாகவும், அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்பு தங்கையாகவும் நடித்திருந்தார். கரசா என்டர்டெயின்மென்ட் மற்றும் பி.ஜி.மீடியா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் காத்திக் என்ற புதுமுகம் ஹீரோ. எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா, பியா பொன்முடி ஆகியோரும் நடிக்கிறார்கள். அசோக் என்ற புதுமுகம் இயக்குகிறார். பாலமுரளி பாலு இசை அமைக்கிறார், கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இடது கை பழக்கம் உள்ள ஒருவனுக்கு வரும் பிரச்சினைகள்தான் கதை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget