காக்கா முட்டை மணிகண்டனின் உதவியாளர் சுரேஷ் சங்கய்யா இயக்கி இருக்கும் படம் ஒரு கிடாயின் கருணை மனு. இதில் விதார்த் ஹீரோ, டப்பிங் கலைஞர் ரவீனா ஹீரோயினாக
அறிமுகமாகிறார். ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகுராம் இசை அமைத்துள்ளார். ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
விதார்த் பாசமாக வளர்த்த ஒரு ஆட்டுகிடா காணாமல் போகிறது. அதைத்தேடி அலைகிறார் விதார்த், அந்த கிடா ரவீனாவின் தந்தையின் கைக்கு கிடைக்கிறது. அந்த கிடாவை அவர் கோவிலுக்கு நேர்ந்து விடுகிறார். ஆடு கடவுளுக்கு பலி கொடுக்கப்படுகிறதா? விதார்த்தின் கைக்கு வருகிறதா இப்படி போகிற கதை. தணிக்கை குழுவின் தடைகளை தாண்டி விரைவில் வெளிவருகிறது.
மகளிர் தினத்தையொட்டி படக்குழுவினர் பெண்களை பெருமைப்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதோடு படத்தின் டைட்டில் கார்ட்டில் முதன் முறையாக ஹீரோயின் பெயரை பெரிய அளவில் பதிவு செய்ய இருக்கிறார்கள். இதுகுறித்து விதார்த் கூறியதாவது:
ஆண்கள் நாம் அனைவரும் இங்கே இருப்பதற்கு மிக முக்கிய காரணம் பெண்கள் தான். அவர்களுக்கு இடம் கொடுக்க நாம் யார்? அவர்கள் தான் நமக்கு இடம் கொடுக்க வேண்டும். ஈராஸ் நிறுவனமும், ஒரு கிடாயின் கருணை மனு படக்குழுவினரும் இணைந்து ஒரு புதிய யோசனையை உருவாக்கி இருக்கின்றோம். இதுவரை படத்தில் கதாநாயகர்களின் பெயர் தான் முதலில் வரும். ஆனால், முதல் முறையாக எங்கள் படத்தின் கதாநாயகி ரவீனாவின் பெயரை ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் முதலாம் இடத்தில் குறிப்பிட்டு இருக்கின்றோம். என்கிறார் விதார்த்.

கருத்துரையிடுக