வில்லி வேடத்தில் கில்லியான சூசன்

பிரபுசாலமன் இயக்கத்தில் விதார்த்-அமலாபால் நடித்த படம் மைனா. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் குணசித்ர வேடத்தில் நடித்த தம்பி
ராமைய்யாவுக்கு தேசிய விருது கிடைத்து. மேலும், இந்த படத்தில் அதிரடியான வில்லியாக நடித்தவர் சூசன். அந்த படத்தில் அவரது வில்லி வேடம் பெரிய அளவில் ரீச் ஆனது. முக்கியமாக, வெளியிடங்களில் சூசனை பார்க்கும் ரசிகர்கள் அவரை திட்டித்தீர்த்தனர். அப்படியொரு கொடூரமான வில்லியாக நடித்தார் சூசன். அதை யடுத்து பல படங்களில் நடித்த அவர், தற்போது சின்ட்ரெல்லா என்ற படத்தில் மீண்டும் ஒரு அதிரடி வில்லியாக உருவெடுத்துள்ளார். முண்டாசுப்பட்டி ராம் குமார் இயக்கும் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் சூசன்.

இதுபற்றி சூசன் கூறுகையில், மைனா படம் எனக்கு மிகப்பெரிய ரீச் கொடுத் தது. பல பாசிட்டீவ் வேடங்களில் நடித்தபோது கிடைக்காத ரீச் ஒரேயொரு நெகடீவ் வேடத்தில் கிடைத்தது. அந்த வேடம்தான் என்மீது வெளிச்சம் பாய்ச்சியது. அதையடுத்து கவனிக்கப்படும் நடிகையான நான், பல படங்களில் நடித் தேன். ஆனால் இப்போது முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கும் சின்ட்ரெல்லா படத்தில் மைனாவை மிஞ்சும் ஒரு அதிரடியான வில்லியாக நடித்து வருகிறேன். அதனால் மைனா படத்தை விட இந்தபடம் திரைக்கு வரும்போது ரசிகர்களிடம் இன்னும் அதிகமான திட்டு வாங்கப்போகிறேன்.

மேலும், படையப்பா ரம்யா கிருஷ்ணன், திமிறு ஸ்ரேயா ரெட்டி ஆகியோர்தான் எனது ரோல் மாடல். நான் நிஜத்தில் சாப்ட்டான கேரக்டர்தான். ஆனால் கோபம் வந்தால் பயங்கரமாக மாறி விடுவேன். அதைத்தான் எனது வில்லி நடிப்பில் வெளிப்படுத்தி வருகிறேன். என்னைத்தேடி பல வேடங்கள் வந்தாலும் வில்லிக்குத்தான் முதலிடம் கொடுக்கிறேன். ரம்யா கிருஷ்ணன், ஸ்ரேயாரெட்டிக்குப்பிறகு மைனா சூசன்தான் என்று சொல்லப்படும் அளவுக்கு அதிரடியான நெகடீவ் வேடங்களை எதிர்பார்க்கிறேன். தற்போது சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்கிறேன். என்றாலும் சினிமாவுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறேன். தவிர தெலுங் கிலும் சில படங்களில் நடிக்கிறேன் என்று கூறும் சூசன், இந்த 2017ம் ஆண்டு என்னை அதிரடி வில்லி நடிகை பட்டியலில் சேர்த்து விடும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget