நயன்தாரா மறுக்க அமலாபால் நடிக்க

இயக்குநர் ஏ.எல்.விஜய்யை விவகாரத்து செய்த பிறகு மீண்டும் பிசியாகிவிட்டார் அமலாபால். இவருக்கு ஆதரவுக்கரம் நீட்டிய தனுஷ், 'வேலையில்லா பட்டதாரி-2' படத்தில் நடிக்கும்
வாய்ப்பைக் கொடுத்தார். அதோடு, வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வரும் 'வட சென்னை' படத்திலும் அமலாபாலை கதாநாயகியாக்கினார். தொடர்ந்து, 'திருட்டுப் பயலே-2' உட்பட வரிசையாக நிறைய படங்களை கையில் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார் அமலா பால்.

அடுத்து மலையாள 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்கவிருக்கிறார். சித்திக் இயக்கும் இப்படத்தில் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் துவங்கவிருக்கிறது.

இந்த படங்களுடன் அறிமுக இயக்குனர் வினோத் இயக்கவிருக்கும் அட்வென்ஞர் படம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார் அமலா பால். சிட்டி பின்னணியில் நடக்கும் இப்படத்தின் கதை அமலா பால் ஏற்கும் கேரக்டரை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. நயன்தாரா நடிக்க மறுத்த கதை இது என்பது உப தகவல். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget