மாங்காய் தொக்கு செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

மாங்காய் - 2
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பனைவெல்லம் - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)

உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிக்க :

எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 6
பெருங்காயம் - 1 சிட்டிகை

செய்முறை :

மாங்காய் தோலை உறித்து, துருவி வைக்கவும். வெறும் கடாயில் வெந்தயம் எடுத்து வறுத்து பொடியாக்கி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் துருவி வைத்த மாங்காய் சேர்த்து 7 முதல் 10 நிமிடங்கள் வதக்கவும். இப்போது மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து, அடுப்பை சிம்மில் வைத்து 5 - 7 நிமிடங்கள் சமைக்கவும். பின் பொடியாக்கி வைத்த வெந்தயம், பனைவெல்லம் சேர்க்கவும். மற்றெரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து மாங்காய் தொக்கில் ஊற்றவும். தொக்கை நன்கு வதக்கி, எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைக்கவும். 

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget