அதிரசம் செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

அதிரசத்திற்கென்றே தனி அரிசி விற்கும். அதை 2 மணி நேரம் ஊற வைத்து, ஒரு துணியில்
ஆறவைத்துப் பின் மிஷினில் கொடுத்து அரைக்கவும்.

அதிரச மாவு தயாரிக்க :

அரைத்த மாவு - 1 கப்,
துருவிய வெல்லம் - 2 கப்,
ஏலக்காய் - சிறிது,
தண்ணீர் - 1 கப்.

செய்முறை :

தண்ணீரையும், துருவிய வெல்லத்தையும் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் வடிகட்டி, மீண்டும் கெட்டியான கம்பி பதம் பாகாகக் காய்ச்சவும். அரிசி மாவை ஒரு தாம்பாளத்தில் கொட்டி, சூடான வெல்லப் பாகை சிறிது சிறிதாக அதில் ஊற்றிக் கிளறவும். தோசை மாவு பதம் வந்ததும் பாத்திரத்திலிருந்து எடுத்துவிடவும். 2 நாள் கழித்து சிறிய வட்டங்களாக இலையில் தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும். மாவு கட்டாயமாக ஈரமாக இருக்க வேண்டும்.

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget