பொரி உருண்டை செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

அரிசி பொரி - 4 கப்,
பாகு வெல்லம் - 1-1¼ கப் (துருவியது),

தண்ணீர் - 1/4 கப்,
அரிசி மாவு - 2 டீஸ்பூன்.

செய்முறை :

அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து கரைத்து வடித்து, கொதிக்க வைத்து பாகு காய்ச்சவும். பாகு உருட்டும் பதத்திற்கு வந்ததும் பொரியை அதில் கொட்டி கிளறி, அரிசி மாவு சேர்த்து கலந்து அல்லது கையில் மாவை தடவிக் கொண்டு உருண்டைகளாக உருட்டி, ஆறியதும் படைத்து பரிமாறவும்.

குறிப்பு: பாகு பதம் கண்டுபிடிக்க - ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி, இரண்டு சொட்டு பாகை அதில் விட்டால் உருண்டு வரும்.

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget