வெஜிடபிள் சால்னா செய்வது எப்படி

நறுக்கிய பீன்ஸ், கேரட்,உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், நூல்கோல் - அனைத்தும் சேர்த்து 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 6 டேபிள்ஸ்பூன்,
பூண்டு - 4 பல்,
உப்பு - தேவைக்கு,

பட்டை,
கிராம்பு - தலா 1,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
 
அரைக்க...

தேங்காய்த்துருவல் - 1/2 கப், பச்சைமிளகாய் - 4, இஞ்சி - சிறு துண்டு.


எப்படிச் செய்வது?

அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும். காய்கறிகளை உப்பு, தண்ணீர்  சேர்த்து வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கிராம்பு, பட்டை தாளித்து வெங்காயம், பூண்டு வதக்கி, அரைத்த விழுது, வெந்த காய்கறிகள், 1 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். அனைத்தும் சேர்ந்து வெந்து கொதித்ததும் இறக்கி, சப்பாத்தி, நாண், தோசையுடன் சூடாக பரிமாறவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget