தேவையானவை :
மேல் மாவிற்கு...
கோதுமை மாவு - 1 கப்,
வெள்ளை ரவை - 3 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.
பூரணத்திற்கு...
வேர்க்கடலை - 1/4 கப்,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
பொடித்த சர்க்கரை - 1/2 கப்,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
மேல்மாவிற்கு கொடுத்த பொருட்களை பிசைந்து 20 நிமிடம் ஊற விடவும். வெறும் கடாயில் வேர்க்கடலையை வறுத்து, தோலை நீக்கி ரவை பதத்திற்கு உடைக்கவும். வேர்க்கடலை ரவை, தேங்காய்த்துருவல், சர்க்கரை சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
ஊறிய மாவினை உருண்டை களாக உருட்டி பூரியாகத் தேய்த்து, அதன் மேல் பூரண உருண்டையை வைத்து மூடி, பூரணம் பிரிந்துவிடாமல், மீண்டும் மெதுவாக பூரியை திரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

கருத்துரையிடுக