கருணைக்கிழங்கு கோஃப்தா செய்வது எப்படி

மைதா - 1 கப், வெங்காயம் - 2,
சோள மாவு - 1/4 கப் + 1 டீஸ்பூன்,
கருணைக்கிழங்கு - 200 கிராம்,
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - 2,
கொத்தமல்லி - சிறிது,
குடை மிளகாய் - 1,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
இஞ்சி - 1 சிறு துண்டு,
பூண்டு - 4 பல்,
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கருணைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். அத்துடன் மைதா, சோள மாவு, மிளகுத் தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து உருண்டைகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு, வெங்காயம், குடை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். மறுபடியும் 1 டீஸ்பூன் சோள மாவுடன், சோயா சாஸ் கலந்து கரைத்து கொள்ளவும். இதை வதக்கிய வெங்காயக் கலவையுடன் சேர்க்கவும். லேசாக கெட்டியான பின் இத்துடன் பொரித்த உருண்டைகளைச் சேர்க்கவும்.

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget