டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன்

டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், அதிகபட்சம் 3 ஜிபி ரேம், 16 எம்பி பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் மற்றும் ஹை ஒஎஸ் 7.5 கொண்டிருக்கும் ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் 7 சிறப்பம்சங்கள்

- 6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர் 

- IMG பவர் விஆர் GE8320 GPU

- 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி

- 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் மற்றும் ஹை ஒஎஸ் 7.5

- 16 எம்பி பிரைமரி கேமரா, குவாட் எல்இடி பிளாஷ்

- ஏஐ கேமரா

- 8 எம்பி செல்பி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்

- கைரேகை சென்சார்

- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

- 6000 எம்ஏஹெச் பேட்டரி 

டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் மேக்னட் பிளாக், மார்பியஸ் புளூ மற்றும் ஸ்ப்ரூஸ் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜிபி + 32 ஜிபி மாடல் விலை ரூ. 6,999, 3 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 7,999 ஆகும். இது அமேசான் தளத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget