ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்த லட்சுமிமேனன்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வருபவர் லட்சுமிமேனன். இவரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம்
ஜிகர்தண்டா. இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார் அவர். சித்தார்த் தனது பேவரிட் ஹீரோ என்பதால் லவ் ட்ராக்கில் அதிக ஈடுபாடு காட்டி நடித்திருப்பதாக சொல்லும் லட்சுமிமேனன். அவருடன் ஜோடி சேர்ந்தது எனக்கு பெரிய மனதிருப்தியை கொடுத்துள்ளது என்கிறார்.

அதோடு, இன்று மலையாளத்தில் திலீப்புக்கு ஜோடியாக ஜோஷி இயக்கத்தில் லட்சுமிமேனன் நடித்துள்ள அவதாரம் என்ற படமும் ரிலீசாகிறது. ஆக, ஒரே கல்லில் இன்று இரண்டு மாங்காய்களை அடித்துள்ளார் லட்சுமிமேனன். ஆக, ஒரே நாளில் இரண்டு பெரிய ஹீரோக்களுடன் நடித்த படங்கள் வெளியாவதால் இதுவரை தனது படங்கள் வெளியானபோது அடைந்த சந்தோசத்தை விட பெரும் சந்தோசத்தில் இருக்கிறார் லட்சுமிமேனன்.

இதுபற்றி லட்சுமிமேனன் விடுத்துள்ள செய்தியில், இன்று வெளியாகும் இரண்டு படங்களிலும் கமிட்டானபோது எனக்கு ப்ளஸ் டூ படிப்பு இருப்பதை சொன்னேன். அப்போது உனக்கு எப்போது கால்சீட் தர முடியுமோ அப்போது உன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிக்கொள்கிறோம் என்று ஜிகர்தண்டா படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜூம், அவதாரம் படத்தை இயக்கியுள்ள ஜோஷியும் சொன்னார்கள். 

அவர்க்ள கொடுத்த ஆதரவு காரணமாக, இந்த படங்களில் அதிக ஈடுபாட்டுடன் நடித்தேன். அதிலும் இந்த படங்களின் நாயகர்களான திலீப், சித்தார்த் இரண்டு பேருமே ரொம்ப சீனியர்கள். அதனால் இந்த படங்களில் அவர்களுடன் நடித்தது எனக்கு பெரிய எக்ஸ்பீரியன்சாக அமைந்தது. அதோடு எனது சினிமா கேரியரிலும் முக்கியமான படங்களாகி விட்டன என்கிறார் லட்சுமிமேனன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget