டாஸ்மாக் மூடப்படும் 500 மது கடைகள்

மூட வேண்டிய, 500 மது கடைகளின் பட்டியலை, 'டாஸ்மாக்' நிறுவனம் தயாரித்து, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப உள்ளது.தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 6,803 மது கடைகள்
உள்ளன. இவற்றில், தினமும் சராசரியாக, 70 கோடி ரூபாய் மதிப்பிலான மது, பீர் வகைகள் விற்பனையாகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி, 504; மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி, 1,500 கடைகள் உள்ளன.

மது அருந்தி விட்டு, வாகனங்கள் ஓட்டுவதால் அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டன. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி,

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருந்த, 504 கடைகள், 2013ல் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி உள்ள மது கடைகளை மூட கோரி தொடர்ந்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, டாஸ்மாக் கடை நேரம் குறைப்பு மற்றும், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் உத்தரவுக்கான கோப்புகளில், நேற்று, கையெழுத்திட்டார்.இதில், மது கடை நேரம் குறைப்பு, இன்று, முதல் நடைமுறைக்கு வருகிறது. இதை தொடந்து, மூட வேண்டிய, 500 மது கடைகளின் பட்டியலை, டாஸ்மாக் அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாநகராட்சி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்,வழிபாட்டு தலம், கல்வி நிலையங்களில் இருந்து, 50 மீட்டர் துாரம்; பிற பகுதிகளில், 100 மீட்டர் துாரத்திற்குள் மது கடைகள் இருக்க கூடாது. ஆனால், பலர் குடித்து விட்டு, சாலையில் செல்வோரிடம் தகராறு செய்வதால், மது கடைகளை மூட கோரி பலர் போராட்டம் நடத்தி,

எங்களிடம், மனு அளித்துள்ளனர்.

ஏற்கனவே, 50 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் விற்பனை உள்ள கடைகள்; மூடக்கோரி அதிகம் பேர் மனு வழங்கி உள்ள கடைகள்; மாநில நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள கடைகள் என, மாவட்ட வாரியாக பட்டியல் தயாராக உள்ளது.இந்த பட்டியல், தமிழக அரசுக்கு அனுப்பப்படும். அவர்கள் கூறும், 500 கடைகளும், ஒரு வாரத்திற்குள் மூடப்படும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget