தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீனா. திரு மணத்திற்கு பிறகும் சில படங்களில் நடித்தார். ஆனால், தற்போது அவருக்கு படங்கள் இல்லை. ஆனபோதும் விஜய்யின் தெறி படத்தில் தனது மகள் நைனிகாவை நடிக்க
வைத்தார். இந்தநிலையில், விரைவில் மீனா தயாரிப்பாளராக இருப்பதாக தற்போது ஒரு செய்தி மீடியாக்களில் பரவிக்கொண்டிருக்கிறது. அப்படி தான் தயாரிக்கும் படங்களில் கமல், தனுஷ், மகேஷ்பாபு போன்ற நடி கர்களை நடிக்க வைக்க மீனா பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறாராம்.
மேலும், நடிகை குஷ்பு அவ்வப்போது படங்கள் தயாரித்து வரும் நிலையில்,கமல் நடித்த பாபநாசம் படத்தை நடிகை ஸ்ரீபிரியா கமலுடன் இணைந்து தயாரித்தார். அதேபோல், சிம்ரனும் படம் தயாரிக்கப்போவதாக சொல்லி கதைகள் கேட்டு வந்தார். ஆனால், பின்னர் அவர் கால்சீட் கேட்ட அபிமான ஹீரோக்கள் கைவிரித்து விட்டனர். அதனால் படம் தயாரிக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கி விட்டார். இப்போது மீனாவும் படம் தயாரிக்க பிரபல நடிகர்களின் கால்சீட் கேட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அவர்கள் அவருக்கு கால்சீட் கொடுக்கிறார்களா? இல்லையா? அல்லது இந்த செய்தியே வதந்தியா? என்பது விரைவில் தெரிந்து விடும்.
அதோடு, விக்னேஷ்சிவன் இயக்கிய நானும் ரெளடிதான் படத்தில் நடித்த நயன் தாரா, அடுத்தபடியாக அவர் சிவகார்த்திகேயனுடன் தன்னை ஜோடி சேர்த்து இயக்கும் படத்தை தானே தயாரிப்பதாகவும் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கருத்துரையிடுக