கபாலி கபாலிடா

தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக கபாலி திரைப்படம் மலாய் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு மலேசியாவில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள்
மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல படத்தில் மலேசிய நடிகர்கள் பலரும் நடித்துள்ளதால் படத்தை மலாய் மொழியில் வெளியிட்டால் அங்குள்ள மலேசிய மக்களும் படத்தைப் பார்ப்பார்கள் என்ற எண்ணத்தில் டப்பிங் செய்துள்ளார்கள். தமிழில் வெளியாகும் தினத்தன்றே மலாயிலும் இப்படம் வெளியாக உள்ளது.
தமிழ்த் திரைப்படங்களுக்கு அந்தக் காலத்திலிருந்தே எப்எம்எஸ் எனப்படும் வெளிநாட்டு உரிமைகளில் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள்தான் முக்கிய இடத்தில் இருக்கின்றன. ஃபாரீன், மலேசியா, சிங்கப்பூர் ஆகியவற்றின் சுருக்கம்தான் எப்எம்எஸ் என்பது இன்றைய தலைமுறையினருக்கு அவ்வளவாகத் தெரியாது.

இத்தனை வருடங்களாக எந்த ஒரு தமிழ்த் திரைப்படமும் மலேசிய மொழியில் டப்பிங் செய்யப்படவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல கபாலி படம் ஜப்பானிய மொழியிலும் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. மேலும் சில வெளிநாட்டு மொழிகளிலும் இப்படத்தை டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதன் மூலம் கபாலி திரைப்படம் சர்வதேச திரைப்படமாக வெளியாக உள்ளது.

கபாலி டீசரை மலாய் மொழியிலும் வெளியிட்டுள்ளனர். அந்த டீசரை அதற்குள் 1 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget