டார்லிங் படத்தில் ஜி.வி.பிரகாசுக்கு ஜோடியாக நடித்தவர் நிக்கி கல்ராணி. அதையடுத்து பாபி சிம்ஹாவுடன் கோ-2வில் நடித்தவர் தற்போது விஷ்ணுவுடன் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், லாரன்சுடன் மொட்ட சிவா
கெட்ட சிவா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்தும் சில படங்களில் நடிப்பதற்கு அவ்வப்போது கதை கேட்டு வருகிறார் நிக்கி கல்ராணி. தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
இப்படி பல மொழிகளிலும் பரவலாக நடித்து வரும் நிக்கி கல்ராணி, தனது கதாபாத்திரங்களில் ரொம்ப கவனமாக இருக்கிறாராம். அதாவது கதாநாயகி என்பது கதாநாயகனுடன் டூயட் பாடுவதுதான் என்றாலும், தொடர்ந்து ஒரேமாதிரியாக இல்லாமல், டார்லிங் படத்தில் பேயாக நடித்தது, கோ-2வில் டிவி நிருபராக நடித்தது போன்று ஏதேனும் கதை சார்ந்த நாயகி கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
குறிப்பாக, ஹீரோக்களுடன் ரொமான்ஸ் செய்வது, டூயட் பாட வேண்டும் என்கிற வேலையை மட்டுமே அவருக்கு கொடுத்தால், அதை அவர் ஏற்பதில்லையாம். எனது ரோலையும் கதையோடு கலந்ததாக மாற்றுங்கள் என்று டைரக்டர்களை கேட்டுக்கொள்கிறாராம் நிக்கி கல்ராணி.

கருத்துரையிடுக