ஆக்சன் நாயகியாக தன்ஷிகா

நடிகை தன்ஷிகா முறைப்படி சண்டைக்கலை பயின்றவர். பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம் கூட கற்று வைத்திருக்கிறார். விஜயசாந்தி விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு. அதற்கு ஏற்ற மாதிரி 'கபாலி' படத்தில்
ரஜினியின் மகளாக நடிக்கிறார். மலேசியாவில் பிறந்து வளர்ந்த லேடி தாதா கேரக்டர். ரஜினிக்கே தண்ணி காட்டுகிற ஆக்ஷன் லேடி கேரக்டர்.

தற்போது அவர் நடித்து வரும் 'காத்தாடி' படத்திலும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். 'கத சொல்லப்போறோம்' படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார். தன்ஷிகா ஜோடியாக அவிஷேக் நடிக்கிறார். இவர் பிரபல நடிகை மகேஸ்வரியின் தம்பி. ஸ்ரீதேவி இவருக்கு அக்கா. அதாவது பெரியம்மா மகள். இவர்கள் தவிர ஜான் விஜய், சம்பத், மனோபாலா, கோட்டா சீனிவாசராவ், காளி வெங்கட் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பவன் இசை அமைக்கிறார், ஜெமின் ஒளிப்பதிவு செய்கிறார்.

“முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறோம். படத்தின் ஆரம்பம் முதல், இறுதிவரை காமெடி கலாட்டாவாக இருக்கும். தொழிலதிபராக வரும் சம்பத்தின் குழந்தை சாதன்யாவை திருடர்களான அவிஷேக், சுமார் மூஞ்சி குமார் டேனியல் இருவரும் பணத்திற்காக கடத்துகிறார்கள். போலீஸ் ஆபிசராக வரும் தன்ஷிகா திருடர்களிடமிருந்து பேபி சாதன்யாவை எப்படி காப்பாற்றினார் என்பதை ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து உருவாக்கி உள்ளோம். கத சொல்ல போறோம் படத்தை பார்த்த லிப்பி சினி கிராப்ட்ஸ் வி.என்.ரஞ்சித்குமார் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டியோஸ் கே.சசிகுமாரும் இந்த படத்தை உலகம் முழுதும் வெளியிடுகிறார்கள். ஏலகிரி, கேரளாவில் உள்ள வாகுமன் மற்றும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் படம் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் எஸ்.கல்யாண்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget