தொடும் முன் உணரும் திரை பற்றி தெரியுமா

மொபைல் மற்றும் டேப்லட் கணினிகளில் தொடுதிரைக்கு அடுத்து என்ன புதிதாக வந்துவிட முடியும்? கையடக்க சாதனங்களை இயக்க, பல புதிய தொழில்நுட்பங்கள் ஆய்வில் இருக்கின்றன. அதில் ஒன்றுதான், நீங்கள் திரையை தொடுவதற்கு முன்பே, எந்த 'மெனு'வை தொடப் போகிறீர்கள் என்று உணரும், 'ப்ரீ டச் சென்சிங்' தொழில்நுட்பம்.
மைக்ரோசாப்ட், தனது விண்டோஸ் போன்கள் மற்றும் டேப்லட்களில் இதை கொண்டுவர யோசித்து வருகிறது. மொபைல் திரையை விரல் அணுகும் கோணம், திரையில் எந்த இடத்தில் விரல் தொட வருகிறது என்பதை இந்த புதிய தொழில்நுட்பம் ஊகித்து, அதற்கேற்ற மெனுவை திறக்கும். அந்த மெனுவில் வேண்டிய வசதியை நோக்கி விரல் நீளும்போது அது, 'செலக்ட்' ஆகிவிடும். அதேபோல, மைக்ரோசாப்டின் தொடு முன் உணர் தொழில்நுட்பத்தின்படி, திரையில் நீங்கள் வேண்டிய இடத்திற்கு சைகை மூலம் நகர்த்திக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல, மொபைலை இரு கைகளிலும் பிடித்திருக்கிறீர்களா, இல்லை ஒரு கையால் பிடித்திருக்கிறீர்களா என்பதையும் உணரும், 'க்ரிப் சென்சிங்' வசதியும் இதில் உண்டு. இரண்டு கைகளாலும் பிடித்திருந்தால் விசைப்பலகை அதற்கு ஏற்றபடி மாறும். வீடியோ, கேமிங், சமீபத்தில் வந்திருக்கும் 'விர்ச்சுவல் ரியாலிட்டி' எனப்படும் மெய்நிகர் மென்பொருட்களை கையாள, இந்த தொடும் முன் உணர் தொழில்நுட்பம் திரை மிகவும் வசதியாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் நம்புகிறது. இந்த தொழில்நுட்பம் மட்டும் வந்துவிட்டால், 'என்னோட போன்ல டச் போயிருச்சு மச்சி' என்று பேஸ்புக் நண்பரிடம் வருத்தப்பட வேண்டியிருக்காது!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget