ஐ.பி.எல் பிளே–ஆப் சுற்று நிலவரம்

யார் அதிக ரன் : ஒன்பதாவது ஐ.பி.எல்., லீக் சுற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி முன்னிலை வகிக்கிறார். இவர் 14 போட்டியில் 4 சதம், 6 அரைசதம் உட்பட 919 ரன்கள் எடுத்துள்ளார்.
இவரை அடுத்து ஐதராபாத் அணியின் வார்னர் (658 ரன்), பெங்களூருவின் டிவிலியர்ஸ் (603), மும்பையின் ரோகித் (489), புனே அணியின் ரகானே (480) உள்ளனர்.

விக்கெட் வேட்டை                
இம்முறை ஐ.பி.எல்., லீக் சுற்றில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் வரிசையில் பெங்களூரு அணியின் யுவேந்திரா சாகல் முன்னிலையில் உள்ளார். இவர் 11 போட்டியில் 19 விக்கெட் வீழ்த்தினார். இவரை அடுத்து ஐதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார் (18 விக்.,), மும்பையின் மெக்லீனகன் (17), ஐதராபாத் அணியின் முஸ்தபிஜுர் (16), பெங்களூருவின் வாட்சன் (16) உள்ளனர்.

‘பிளே–ஆப்’ அட்டவணை          
லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். முதலிரண்டு இடங்களை கைப்பற்றும் அணிகள் ‘தகுதிச் சுற்று–1’ல் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறும்.
          
மூன்று, நான்காவது இடங்களை பெற்ற அணிகள் ‘எலிமினேட்டர்’ போட்டியில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி, ‘தகுதிச் சுற்று–1’ல் தோல்வி அடைந்த அணியுடன் ‘தகுதிச் சுற்று–2’ல் விளையாடும். இதில் வெல்லும் அணி பைனலுக்கு தகுதி பெறும்.

லீக் சுற்றின் முடிவில் குஜராத் (18 புள்ளி), பெங்களூரு (16), ஐதராபாத் (16), கோல்கட்டா (16) அணிகள் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்தன. வரும் மே 24ல் பெங்களூருவில் நடக்கவுள்ள தகுதிச் சுற்று–1ல் முதலிரண்டு இடங்களை பிடித்த குஜராத், பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மே 25ல் டில்லியில் நடக்கவுள்ள ‘எலிமினேட்டர்’ போட்டியில் 3, 4வது இடங்களை பிடித்த ஐதராபாத், கோல்கட்டா அணிகள் விளையாடுகின்றன. தகுதிச் சுற்று–2 டில்லியில் வரும் மே 27ல் நடக்கவுள்ளது. பைனல்  மே 29ல் பெங்களூருவில் நடக்கும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget