எத் திசையிலும் மகளிர் ஆட்சி

தமிழகத்தில் ஜெயலலிதா, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, குஐராத்தில் ஆனந்திபென் படேல், ஜம்மு-காஷ்மீரில் மெகபூபா முப்தி, என இந்தியாவின் நான்கு திசையிலும் பெண்கள் ஆட்சி புரியும் விநோதம் நிகழ்ந்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தமிழகத்தில் ஜெயலலிதாவும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும் தொடர்ச்சியாக மீண்டும் ஆட்சி அமைக்கின்றனர். இருவரது கட்சியும் தனிபெரும்பான்மையுடன் வென்றுள்ளது.

ஜெயலலிதா:
தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜர், எம்.ஜி. ஆருக்கு., அடுத்தப்படியாக ஜெயலலிதா தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவர் 6 வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

2014 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு 37 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு தனிபெரும்பான்மை பெற்றுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களை கொண்ட கட்சிகளின் வரிசையில் பா.ஜ., காங்கிரசுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது இடத்தை அ.தி.மு.க., பெற்றுள்ளது.

ஜெயலலிதா தனி ஒருவராக கட்சியை தன் முழுகட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வித்தை தெரிந்தவர்.

மம்தா பானர்ஜி:
1997 ம் ஆண்டு காங்கிரசிலிருந்து பிரிந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார் மம்தா பானர்ஜி. இவர் மேற்கு வங்கத்தின் 34 ஆண்டு இடதுசாரிகள் ஆட்சிக்கு முடிவு கட்டியவர்.

இந்தியாவின் முதல் பெண் ரயில்வே துறை அமைச்சராகவும் மம்தா இருந்துள்ளார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் 34 இடங்களை கைப்பற்றி அதிக எம்.பி.க்கள் கொண்ட கட்சிகள் வரிசையில் திரிணாமூல் காங்கிரஸ் 6 வது இடத்தில் உள்ளது.

2016 மேற்குவங்க சட்டசபை தேர்தலில் 211 இடங்களை பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக அம்மாநில முதல்வராக மம்தா பதவிறே்க உள்ளார்.

ஆனந்தி பென் படேல்:
நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக பதவியேற்றார் ஆனந்தி பென் படேல். 1987 ல் தொடங்கி 29 ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கையில் ஈடுப்பட்டு வருகிறார். முன்னதாக, குஜராத் அரசில் கல்வி, வருவாய் உள்ளிட்ட முக்கிய துறைகளில் அமைச்சராகவும் பணி செய்துள்ளார்.

மெகபூபா முப்தி:
தந்தை முக்தி முகமது சையது இறப்பை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக மெகபூபா முப்தி பதவியேற்றார். இவர் இந்திய மாநிலங்களில் இரண்டாவது பெண் முஸ்லீம் முதல்வர். இந்திய பாகிஸ்தான் எல்லை பிரச்சனைகள் நிறைந்த மாநிலத்தின் முதல்வராக இருப்பது முப்திகான சவால் பணிகளில் ஒன்று.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget