திரைப்படங்களில் நடிப்பதை தள்ளி வைத்துவிட்டு சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வந்த நடிகை லக்ஷ்மி மஞ்சு தற்போது மீண்டும் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
இயக்குனர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு “லக்ஷ்மி பாம்” என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் பூஜை நேற்று(மே 20) ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்னா ஸ்டுடியோவில் நடைபெற்றது. திரில்லர் காமெடியான இப்படத்தில் நீதிபதியாக லக்ஷ்மி மஞ்சு நடிக்கவுள்ளார். அடுத்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. முதற்கட்ட படப்பிடிப்பிலேயே படத்தை முடிவுக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. மௌனிகா சந்திரசேகர் மற்றும் உமா லக்ஷ்மியின் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சுனில் கஷ்யப் இசையமைக்கின்றார்.

கருத்துரையிடுக