வாலு என் ஆளு

சிம்பு நடித்து ஒரு படம் வெளிவருவது என்பது வரலாற்றுச் சாதனையாக உள்ள இந்த காலத்தில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இதோ வரும், அதோ வரும் என இழுத்துக் கொண்டிருந்த 'இது
நம்ம ஆளு' கடைசியாக நாளை மறுநாள் 27ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகத்தான் சிம்பு, நயன்தாரா இருவரும் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இருவரும் மணக் கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களை வேண்டுமென்றே கொடுத்திருக்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. சிம்புவும், நயன்தாராவும் முன்னாள் காதலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியிருக்க இந்தப் புகைப்படங்களைப் பார்த்த சில அப்பாவி ரசிகர்கள் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டதோ என்று கேட்குமளவிற்கு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

'வாலு' படத்தை வாங்கி வெளியிட்டு நஷ்டமடைந்த சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர், 'இது நம்ம ஆளு' படத்தை வெளியிட தவியாய் தவித்துவிட்டார். படத்தை இயக்கிய பாண்டிராஜ் முதல் பிரதிக்காக செலவு செய்த தொகையையும் செட்டில் செய்ய முடியாமல், 'வாலு' படத்தில் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு நட்டத் தொகையையும் தர முடியாமல் திணறிவந்தார்.

ஒரு வழியாக, சில திரையுலகப் பிரமுகர்களின் உதவியோடு அனைவரையும் உட்கார வைத்து பேசி முடிவுக்கு வந்தார்கள். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 15 கோடி ரூபாய் வியாபாரம் ஆகியுள்ள 'இது நம்ம ஆளு' சுமார் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது. இந்தப் படம் ஓடினால் தான் டிஆர் முந்தைய கடன்களிலிருந்தும் மீள முடியும், சிம்புவிற்கும் இழந்து போன மார்க்கெட் கிடைக்கும். இதெல்லாம் நடக்குமா என்பது இரண்டு நாட்கள் கழித்து தெரிந்துவிடும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget