இஸ்ரோவின் மறுபயன்பாட்டு விண்கலம்

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), பல ஆண்டுகளாக மறுபயன்பாட்டு தொழில்நுட்ப விண்கல ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த விண்கலத்தை சோதிக்க முயற்சி செய்து ஒத்திவைக்கப்பட்டு
வந்தது. இந்த மறுபயன்பாட்டு விண்கல சோதனை வெற்றிபெற்றால் செயற்கைக்கோள் ஏவுவதற்கு ஆகும் 10ல் ஒரு பங்கு செலவு மிச்சமாகும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

குட்டிவிமானம் போன்ற வடிவில் இருக்கும் இந்த விண்கலம், பூமியில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்படும். பின்னர் இந்த விண்கலம் திரும்பி பூமிக்கே அழைத்துக் கொள்ளப்படும். தற்போது இந்த விண்கலம் ஹரிகோட்டாவில் சோதனை அடிப்படையில் ஏவுவதற்கு தயார் நிலையில் உள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு இந்த விண்கலத்தை ஏவுவதற்கு தயார் நிலையில் வைத்திருப்பதாக இஸ்ரோ அதிகாரிகள் உறுதியாக கூறியுள்ளனர். பருவநிலை மாற்றம் மற்றும் காற்றின் வேகம் அதிமிருந்தால் மட்டும் விண்கலம் ஏவும் சோதனை ஒத்திவைக்க வாய்ப்புள்ளது. 

பூமியில் இருந்து 70 கி.மீ. உயரத்தில் பறக்கவிட்டு தரைதள விஞ்ஞானிகள் வழிகாட்டுதலின் படி சென்னை கடலோர பகுதியில் 500 கி.மீ தூரத்தில் விண்கலத்தை மீண்டும் திரும்ப பெற்றுக்கொள்வார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget