தமிழில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் நயன்தாரா தயாரிப்பாளர் ஆகப் போகிறார் என கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. சிவகார்த்திகேயன் அந்தப் படத்தில் நாயகனாக நடிக்கப் போகிறார் என்றும்
சொன்னார்கள். ஆனால், நயன்தாரா அப்படிப்பட்ட தகவல்களை மறுத்துள்ளார். வழக்கம் போல அவருக்கு நெருக்கமான அந்த ஒரே ஒரு மலையாளப் பத்திரிகையாளரிடம் இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
“அப்படிப்பட்ட செய்திகளில் உண்மையில்லை. எனக்குத் தெரிந்தது நடிப்பு மட்டும்தான், அதுதான் என்னுடைய வேலை. நான் தயாரிப்பாளராகப் போகிறேன் என்ற செய்தியில் துளி கூட உண்மையில்லை. தயாரிப்பில் எனக்குத் துளி கூட ஆர்வமில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா தற்போது தமிழில் 'இருமுகன்' படத்திலும், தெலுங்கில் 'பாபு பங்காரம்' படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்திலும், சற்குணம் தயாரிக்கும் மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளார். இன்னும் சில நாட்களில் அவர் நடித்துள்ள 'இது நம்ம ஆளு' படம் திரைக்கு வர உள்ளது.
ஏற்கெனவே, காதல் காரணமாக சில பல கோடிகளை இழந்த நயன்தாரா எதற்காக படம் தயாரித்து மேலும் சில கோடிகளை இழக்க வேண்டும். நடிப்பு நன்றாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது என்கிறார்கள் கோலிவுட்டில்.

கருத்துரையிடுக