அரண்மனை - 2 படத்துக்குப் பிறகு சுந்தர்.சி. நடித்துள்ள படம் முத்தின கத்திரிக்கா. இந்தப் படத்தில் சுந்தர்.சிக்கு ஜோடியாக, பூனம் பஜ்வா நடிக்க, சுந்தர்.சியின் சிஷ்யர் வெங்கட் ராகவன்
இயக்கியுள்ளார். இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற வெள்ளி மூங்கா படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பது வயதைக் கடந்தும் இன்னும் திருமணமாகாத கதாநாயகனைக் குறிக்கும் வகையில் முத்தின கத்திரிக்கா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இது அரசியல் கலந்த நகைச்சுவை படம். வைபவ், சதீஷ், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படம் சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முத்தின கத்தரிக்கா படத்தை பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் முத்தின கத்திரிக்காவுக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். யு சான்று கிடைத்த மகிழ்ச்சியில் 'முத்தின கத்திரிக்கா' படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தை வருகிற ஜூன் 17ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
சுந்தர்.சி. தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த ஹலோ நான் பேய் பேசுறேன் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தது. அதனால் முத்தின கத்தரிக்கா படத்துக்கும் நிறைய தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

கருத்துரையிடுக