பெங்களூரைச் சேர்ந்த ப்ரணீதா அழகும், திறமையும் மிக்க நடிகை ஆனால் அவரால் தமிழில் எளிதாக ஜெயிக்க முடியவில்லை. உதயன்
படத்தில் அருள்நிதி ஜோடியாக அறிமுகமானார். முதல் படமே தோல்வி என்பது பிரணீதாவுக்கு பின்னடைவாக இருந்தது. அடுத்து சகுணி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தார் அதுவும் தோல்வி படமாக அமைந்தது. அடுத்து மாஸ் படத்தல் சூர்யா ஜோடியாக நடித்தார். அதுவும் தோல்வி. இப்படி தமிழில் அவர் படங்கள் தோற்றாலும் தெலுங்கு, கன்னடத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.
தற்போது மீண்டும் தமிழுக்கு திரும்பி உள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் ஜெய் ஜோடியாகவும், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்தில் அதர்வா ஜோடியாகவும் நடித்து வருகிறார். இதுகுறித்து பிரணீதாக கூறியதாவது:
தமிழில் முன்னணிக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் நடித்த படங்கள் அனைத்தும் நல்ல படங்கள்தான். தெலுங்கு, கன்னடத்தில் பிசியாக இருந்ததால் தமிழில் அக்கறை செலுத்தாமல் இருந்ததுதான் என் தவறு. ஆண்டுக்கு இத்தனை படம் நடிக்க வேண்டும் என்று எந்த கணக்கும் வைத்துக் கொள்ளவில்லை. அதனால் நான் நிதானமாக இருக்கிறேன். தற்போது நடித்து வரும் தமிழ் படங்கள் எனக்கு ஒரு இடத்தை தரும் என்று நம்புகிறேன்.
கிளாமராக நடிக்க எனக்கு தயக்கம் இல்லை. அதற்கான வாய்ப்பு வரவில்லை. பாகுபலி போன்ற சரித்திர படம் ஒன்றில் இளவரசியாக நிறைய நகைகள் அணிந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. எல்லா பேட்டியிலும் காதல் பற்றி கேட்கிறார்கள். காதல் எனக்கு மிகவும் பிடிக்கும், காதல் படங்களை விரும்பி பார்ப்பேன். ஆனால் எனக்கு காதல் வருமென்று தோன்றவில்லை. காதலிக்கும் எண்ணமும் இல்லை. நான் ஹோம் ஸ்டிக். அதனால் எப்போது திருமணம் நடந்தாலும் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்வேன். என்கிறார் பிரணீதா.

கருத்துரையிடுக