லட்சுமண் இயக்கிய ரோமியோ ஜூலியட் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்தார் ஹன்சிகா. அந்த படத்தின் கதை ஹன்சிகாவை சுற்றித்தான்
பின்னப் பட்டிருந்தது. அதன்பிறகு மீண்டும் அதே லட்சுமண் இயக்கத்தில் ஜெயம்ரவி நாயகனாக நடித்துள்ள போகன் படத்தில் தற்போது நடித்திருகிறார் ஹன்சிகா. இந்த படத்தில் அரவிந்த்சாமியும் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார்.
மேலும், கூடு விட்டு கூடு பாயும் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம்ரவி-அரவிந்த்சாமி இருவருமே ஹீரோ-வில்லன் என இரண்டு மாதிரியான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்களாம். இவர்களுக்கு நடுவே சிக்கிக்கொள்ளும் பெண்ணாக நடித்துள்ள ஹன்சிகா, இதுவரையில்லாத அளவுக்கு ஒரு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். ரோமியோ ஜூலியட்டில் அவரது அழுத்தமான நடிப்பை பார்த்துதான் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சவாலான ஹீரோயினி வேடத்துக்கு ஹன்சிகாதான் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தாராம் லட்சுமண். அதற்கேற்ப, ஜெயம்ரவி-அரவிந்த்சாமியுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறாராம் ஹன்சிகா.
அதோடு, போகன் படத்திற்கு பிறகு தமிழில் புதிய படமில்லாமல் தெலுங்கிற்கு சென்று லக்குனோடு -என்ற படத்தில் நடித்து வரும் ஹன்சிகாவிற்கு இந்த படம் திரைக்கு வரும்போது புதிய படங்கள் மளமளவென்று புக்காகும் என்கிறார்கள்.

கருத்துரையிடுக