கங்காரு, அமைதிப்படை படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கி வரும் படம் மிக மிக அவசரம். இதில்
கோரிப்பாளையம் ஹரீஷ், ஸ்ரீப்ரியங்கா, வழக்கு எண் முத்துராமன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படம் ஒரு பெண் கான்ஸ்டபிளின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதுகுறித்து இயக்குனரும், தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி கூறியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மகளிர் போலீசாரின் பாதுகாப்புக்காக எத்தனையே ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால் உண்மையில் அதற்கு நேர்மாறான விஷயங்கள்தான் நடக்கின்றன. அதை மையமாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. மிக உணர்வுப்பூர்வமான கதை. திரையில் வரும்போது அதிர்வுகளை ஏற்படுத்தும். இந்தப் படம் கதாநாயகியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு 99 சதவீதம் முடிந்துவிட்டது. இந்தப் படம் முழுவதுமே பவானிக்குப் பக்கத்தில் உள்ள கோனேரிப்பட்டி அணையில்தான் நடந்தது. படப்பிடிப்பின்போது அந்தப் பகுதி மக்கள் தந்த அபார ஒத்துழைப்பை மறக்க மாட்டேன். என்கிறார் சுரேஷ் காமாட்சி.

கருத்துரையிடுக