அந்த மாதிரி நடிக்க மாட்டேன் ராகுல் பிரீத் சிங்

தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ என தமிழில் மூன்று படங்களில் நடித்த ராகுல்பிரீத் சிங்கிற்கு எந்த படமும் கைகொடுக்கவில்லை.
அதனால் தோல்வி முகத்துடன் தெலுங்கிற்கு சென்ற அவர், போன வேகத்திலேயே ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாகிவிட்டார். அதோடு, மீண்டும் தமிழுக்கு வந்திருப்பவர், இந்தி படங்களிலும் நடித்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில், ராகுல் பிரீத் சிங்கை படுகவர்ச்சிகரமான வேடங்களில் நடிக்க சில கமர்சியல் டைரக்டர்கள் அணுகி கதை சொன்னார்களாம். ஆனால், அந்த கதைகளில் நடிக்க மறுத்துவிட்டாராம் அவர். அதோடு, ஆரம்பத்தில் சில படங்களில் நான் கிளாமராக நடித்தது உண்மைதான். இப்போது எனக்கு நடிப்பில் பெரிய புரிதல் இல்லை. மேலும், எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்பதற்காக அப்படி நடித்தேன். இப்போது முன்னணி நடிகை பட்டிலில் சேர்ந்துவிட்டேன்.

அதனால் இனிமேல் உடம்பை காட்டி நடித்து தான் இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறநிலை இல்லை. அதனால் பர்பாமென்ஸ் நடிகையாகப்போகிறேன். அந்த கோணத்தில்தான் இப்போது படங்களை செலக்ட் பண்ணி நடித்துள்ளேன். அதிகப்படியான பணத்திற்கு ஆசைப்பட்டு கவர்ச்சி கதாநாயகி பட்டியலில் ஒருபோதும் நான் சேரமாட்டேன் என்று கூறி விட்டாராம் ராகுல்பிரீத் சிங்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget