தேவையானவை
- 100 கிராம் தக்காளி துண்டுகள்
- 2 டேபிள்ஸ்பூன் துவரம்பருப்பு
- 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
- சிறிதளவு கறிவேப்பிலை
- தேவையான அளவு உப்பு ,எண்ணெய்
- வறுத்து அரைக்க
- 1 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு ,துவரம் பருப்பு
- 1 டீஸ்பூன் தனியா ,மிளகாய்த்தூள்
- சிறிதளவு பெருங்காயம்
- 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
செய்முறை
துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.அரைக்க எடுத்தவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.தக்காளித் துண்டுகளுடன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து ,உப்பு ,வேக வைத்த பருப்பு ,அரைத்த விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.கூட்டு பதத்தில் வந்ததும் கறிவேப்பிலை தாளித்து கொட்டி இறக்கவும்.
கருத்துரையிடுக