பாகற்காய் கூட்டு


தேவையானவை 

  • 100 கிராம் நறுக்கிய  பாகற்காய் 
  • எலுமிச்சை  அளவு  புளி
  • 1 டேபிள்ஸ்பூன் துவரம் பருப்பு 
  • 1/4டீபூன் மஞ்சள்தூள் 
  • தேவையான அளவு உப்பு ,எண்ணெய் 
  • தாளிக்க 
  • 1/4 டீஸ்பூன் கடுகு ,கடலைப்பருப்பு ,உள்ளுதம் பருப்பு 
  • தேவையான அளவு கறிவேப்பிலை 
  • வறுத்து அரைக்க
  • டீஸ்பூன் கடலைப்பருப்பு
  • 2 1/4 டீஸ்பூன் தனியா 
  • 3 வர மிளகாய் 
  • சிறு துண்டு பெருங்காயம்
  • 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்  துருவல்

செய்முறை 
பாகற்காயுடன் கடலைப்பருப்பு ,துவரம் பருப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.அரைக்கக் எடுத்தவற்றை எண்ணெயில் வறுத்து ,தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்து கொள்ளவும்.புளியைக் கரைத்து வெந்த பாகற்காய்,பருப்புடன் சேர்த்து ,மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும்.அரைத்த விழுது ,உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.நன்றாக கொதித்ததும் இறக்கவும்.தாளிக்க கொடுத்துள்ளவற்றை எண்ணெயில் தாளித்து கொட்டவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget