தேவையானவை: பருப்புக்கீரை – ஒரு கட்டு
(கழுவி, பொடியாக நறுக்கவும்), துவரம்பருப்பு – முக்கால் கப், பூண்டு – 2 பல், வெங்காயம், தக்காளி – 1, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பச்சை மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 5, புளி – நெல்லிக்காய் அளவு, குழம்பு பொடி – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, துவரம்பருப்பு, கீரை, தக்காளி, உரித்த பூண்டு பல், கீறிய பச்சை மிளகாய், பாதி அளவு சின்ன வெங்காயம், மஞ்சள்தூள் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… மீதமுள்ள வெங்காயம், காய்ந்த மிளகாய், சீரகம், தனியாத்தூள், கறிவேப்பிலை, குழம்பு பொடி, உப்பு போட்டு வதக்கி, புளியைக் கரைத்து விடவும். கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்கி, வேக வைத்த பருப்புக் கலவையில் கொட்டிக் கடைந்து, சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.

கருத்துரையிடுக