வெயில் காலத்தில் மோர் குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இன்று உருளைக்கிழங்கை சேர்த்து மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
செய்முறை பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெலிதாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும்.மிளகாயை வகுந்து வைக்கவும்.மாங்காயை நீள வாக்கில் மெலிதாக நறுக்கவும்.மிளகாய்,மிளகு,தேங்காய் பூ,ஆகியவற்றை அரைத்து கொள்ளவும்.சின்ன வெங்காயம்,பூண்டை வதகி எடுத்து,வறுத்த மிளகு, சீரகத்துடன்,இஞ்சியை சேர்த்து அரைத்து கொள்ளவும்.புளியை கரைத்து வடிகட்டி வைக்கவும்.கனமான பாத்திரத்தில் 100 மில்லி நல்லெண்ணய் விட்டு கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை போட்டு பொரிக்கவும்.பச்சை மிளகாய் போடவும்.அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி,தேங்காய் மசாலாவை சேர்த்து வதக்கி,பிறகு இரண்டாவதாக அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கி,புளி தண்ணீரை கலந்து ,மாங்காயை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.மஞ்சள் தூளை கலந்து விடவும்.15 நிமிடம் கொதித்ததும் தேவையான உப்பு கலந்து ,கழுவிய மீனை போட்டு ஒரு கொதி விடவும்.ஒரு மணி நேரம் கழித்து பரிமாறவும்.
தேவையானவை: நறுக்கிய கோவக்காய் – முக்கால் கப், பனீர் துண்டு கள் – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2 (தோல் உரித்து அரைத்துக் கொள்ளவும்), மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன், சீரகம், சோம்பு – தலா ஒரு டீஸ்பூன், புளிக் கரைசல் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. பொடிக்க: தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் (தனித்தனியே வறுத்து அரைக்கவும்). செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய பனீ ரை போட்டு வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, சூடானதும் சோம்பு, சீரகம் போட்டு தாளித்து, வெங்காய விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நறுக்கிய கோவக்காயைப் போட்டு நன்றாக வதக்கி… உப்பு, மஞ்சள்தூள், வறுத்து பொடித்த மசாலாவை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இதில் புளிக் கரைசலை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வறுத்த பனீரை போட்டு, நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.
தேவையானவை: காராமணி – முக்கால் கப், கத்திரிக்காய் – 2, வெங் காயம், கீறிய பச்சை மிளகாய், தக்காளி – தலா 1, பூண்டு – 2 பல், புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், தேங்காய் துண்டுகள் – 2, சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு. செய்முறை: தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். காராமணியை வறுத்து குக்கரில் போட்டு, தண்ணீர் விட்டு 5 விசில் வரும்வரை வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… நறுக் கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, கத்திரிக்காய், கீறிய பச்சை மிள காய் போட்டு நன்றாக வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனி யாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, அரைத்த தேங்காய் – சீரக விழுதைப் போட்டு, புளியைக் கரைத்து ஊற்றவும். ஒரு கொதி வந்ததும், வேக வைத்த காராமணியை சேர்த்துக் கொதிக்க வைக் கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் குழம்பில் கொட்டி, கத்திரிக்காய் வெந்ததும் இறக்கவும்.
தேவையானவை: குண்டு மொச்சை – முக்கால் கப், கத்திரிக்காய் – 2, முருங்கைக்காய், கீறிய பச்சை மிளகாய், தக்காளி, பெரிய வெங்காயம் – தலா 1, புளி – எலுமிச்சை அளவு, பூண்டு – 2 பல், தேங் காய் துண்டுகள் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனி யாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, துவரம்பருப்பு – ஒரு கைப்பிடி, புளி – நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு, செய்முறை: காய்களை நறுக்கிக் கொள்ளவும். வெறும் கடாயில் மொச்சையை வறுத்து, குக்கரில் போட்டு தண்ணீர் விட்டு, 5 நிமிடம் வேக வைக்கவும் (ஊற வைத்து, வேக வைப்பதனால் 3 விசில் வந்தால் போதும்). துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளி த்து, தனியே எடுத்து வைக்கவும். தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, கத்தரிக்காய், முருங்கைக்காய், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கி… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, கறி வேப்பிலையை போட்டு சிறிது நேரம் வதக்கவும். இதனுடன் தேங் காய் – சீரக விழுதை சேர்த்து ஒரு முறை கிளறவும். இவற்றை குக்க ரில் போட்டு, புளியைக் கரைத்துவிட்டு, வேக வைத்து… பருப்பு, மொ ச்சை, தாளித்தது ஆகியவற்றை சேர்த்து, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
தேவையானவை: நறுக்கிய காளான் – ஒரு கப், சின்ன வெங்காயம் – 10, தேங்காய் துண்டுகள் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகு – 3 டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: தேங்காய், மிளகு, சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள் ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு… நறுக்கிய காளா ன், சின்ன வெங்காயம், அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள்தூள், மிள காய்த்தூள், தனியாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் தெளி த்து, அடுப்பில் வைத்து தட்டால் மூடவும். லேசாக வெந்ததும் மூடி யைத் திறந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, காளான் வேகு ம்வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
தேவையானவை: வாழைப்பூ – 1 (ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பை நீக்கவும்), ஒன்றிரண்டாக தட்டிய சின்ன வெங்காயம், தேங்காய்ப் பால் – தலா ஒரு கப், சீரகம் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு. செய்முறை: ஆய்ந்த வாழைப்பூவை சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து விட்டு, வெங்காயம், சீரகத்தைப் போட்டு… உப்பு, மஞ்சள்தூள், மிளகா ய்த்தூள், எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் வெந்த வாழைப்பூ, தேங்காய்பால் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
தேவையானவை: காலிஃப்ளவர் (தனித்தனியாக உதிர்த்து வெந் நீரில் போட்டு எடுக்கவும்), பச்சைப் பட்டாணி – ஒரு கப், தக்காளி, வெங்காயம் – தலா 1, பச்சை மிளகாய், தேங்காய் துண்டுகள் – தலா 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தனியாத்தூள், இஞ்சி-பூண்டு விழுது – தலா 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்ந்தது – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு, – தேவையான அளவு. செய்முறை: தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு வதக்கி… வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி போட்டு, மிதமான தீயில் நன்றாக வதக்கவும். கடைசியில் தேங்காய் – சீரக விழுதைச் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து காய்கறி நன்றாக வெந்ததும் இறக்கவும்.
தேவையானவை: பருப்புக்கீரை – ஒரு கட்டு (கழுவி, பொடியாக நறுக்கவும்), துவரம்பருப்பு – முக்கால் கப், பூண்டு – 2 பல், வெங்காயம், தக்காளி – 1, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பச்சை மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 5, புளி – நெல்லிக்காய் அளவு, குழம்பு பொடி – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, துவரம்பருப்பு, கீரை, தக்காளி, உரித்த பூண்டு பல், கீறிய பச்சை மிளகாய், பாதி அளவு சின்ன வெங்காயம், மஞ்சள்தூள் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… மீதமுள்ள வெங்காயம், காய்ந்த மிளகாய், சீரகம், தனியாத்தூள், கறிவேப்பிலை, குழம்பு பொடி, உப்பு போட்டு வதக்கி, புளியைக் கரைத்து விடவும். கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்கி, வேக வைத்த பருப்புக் கலவையில் கொட்டிக் கடைந்து, சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.
தேவையானவை: தோல் உரித்த பூண்டு – ஒரு கப், புளி – எலுமிச்சை அளவு, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டை போ ட்டு வதக்கவும். இதில் மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, பூண்டு வேகும் அளவு தண்ணீர் விடவும். பிறகு புளியைக் கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.