காலிஃப்ளவர்-பட்டாணி குழம்பு


தேவையானவை: காலிஃப்ளவர் (தனித்தனியாக
உதிர்த்து வெந் நீரில் போட்டு எடுக்கவும்), பச்சைப் பட்டாணி – ஒரு கப், தக்காளி, வெங்காயம் – தலா 1, பச்சை மிளகாய், தேங்காய் துண்டுகள் – தலா 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தனியாத்தூள், இஞ்சி-பூண்டு விழுது – தலா 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்ந்தது – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு, – தேவையான அளவு.
செய்முறை: தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு வதக்கி… வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி போட்டு, மிதமான தீயில் நன்றாக வதக்கவும். கடைசியில் தேங்காய் – சீரக விழுதைச் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து காய்கறி நன்றாக வெந்ததும் இறக்கவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget