தேவையானவை: பச்சை மொச்சைப் பயறு – கால்
கிலோ, வெங்காயம், தக்காளி – தலா 1, புளி – நெல்லிக்காய் அளவு, பூண்டு – 2 பல், தேங்காய் துண்டுகள் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்தூள் – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்கா ளியை நறுக்கிக் கொள்ளவும். தேங் காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட் டு, காய்ந்ததும் கடுகு, உளுத்த ம்பருப்பு போட்டு தாளித்து, நறுக் கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். பூண்டு, தக்காளி சேர் த்து சிறிது நேரம் வதக்கி, பச்சை மொச்சைப் பயறு போட்டு வதக்க வும். புளியை கரைத்து விட்டு… தேங்காய்-சீரகம் விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, 4 விசில் வந்ததும் இறக்கவும்.

கருத்துரையிடுக