மணத்தக்காளி குழம்பு


தேவையானவை: பச்சை மணத்தக்காளிக்காய்,
நறுக்கிய சின்ன வெங்காயம், தேங்காய்ப்பால் – தலா ஒரு கப், பூண்டு – 4 பல், தக்காளி – 1, புளி – எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், குழம்பு பொடி – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,
செய்முறை: மணத்தக்காளியைக் கழுவி காம்பு நீக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன் றாக வதக்கி… கறிவேப்பிலை, நறுக்கிய தக் காளி, மஞ்சள்தூள், மிளகாய்தூள், குழம்பு பொடி, உப்பு போட்டுக் கிளறவும். மணத் தக் காளிக்காயைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி, புளியைக் கரைத்து விட்டு, காய் வேகும் வரை கொதிக்க விடவும். இதில் தேங்காய்ப் பால் சேர்த்து, மிதமான தீயில் சிறிது நேரம் வைத்திருந்து, எண் ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget