
மலிவான விலை மொபைல் போன்களுக்குப் பெயர் பெற்ற ஐ பால் நிறுவனம் அண்மையில் ரூ.1,299 விலையிட்டு தன் பேப் 2.4 சி (IBall FAB 2.4C) என்னும் போனை
அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இரண்டு சிம் பயன்பாடு கிடைக்கிறது. பார் டைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2.4 அங்குல அகலத்தில் டி.எப்.டி. திரை கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஜாக், 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 15 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி ஆகியவை கிடைக்கின்றன. 0.3 எம்.பி. திறன் கொண்ட, டிஜிட்டல் ஸூம் கொண்ட கேமரா உள்ளது.