ஒருவரின் எண்ணங்கள், திட்டங்கள், கருத்துக் கோவைகள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்க பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம் ஒரு சிறப்பான சாதனம் ஆகும்.
1. எப்போதும் ஒரே பேக் கிரவுண்டினை ஸ்லைட்களுக்குப் பயன்படுத்தவும். பிரசன் டேஷன் புரோகிராமுடன் ரெடியாகப் பல டிசைன் டெம்ப்ளேட்கள் கிடைக்கின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பிரசன் டேஷன் முழுவதும் அதனையே பயன் படுத்தவும்.
2. கலர்களைப் பயன்படுத்துகையில் ஒன்றுக்கொன்று எடுத்துக் காட்டும் வகையில் உள்ளதாக இருக்க வேண்டும். லைட் கலரில் எழுத்துகள் இருந்தால் பின்னணி சற்று டார்க்காக இருக்க வேண்டும். இதனை எப்படி அமைக்க முடியும் என்ற திண்டாட்டத்தில் இருந்தால், டிசைன் டெம்ப்ளேட்டுகளைப் பார்த்துப் புரிந்து கொண்டு செயல்படவும்.
3. பவர்பாய்ண்ட் என்பது காட்சியை அடிப்படையாகக் கொண்டு தகவல்களைத் தரும் ஒரு மீடியமாகும். எனவே படங்களை இணைத்து ஸ்லைடுகளை அமைப்பது பிரசன்டேஷனை நன்றாக எடுத்துக் காட்டும். ஒரு ஸ்லைடில் ஒரு நல்ல படம் அல்லது கிராபிக் பயன்படுத் தவும். ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் நாம் சொல்ல வந்ததைத் திசை திருப்பும். மேலும் பயன்படுத்தப்படும் படங்கள், எடுத்துச் சொல்லப்படும் கருத்துகள் சார்ந்ததாக இருக்க வேண்டும். மேலும் படங்கள் இதனைப் பார்ப்பவர்கள் நன்றாகப் பார்த்துப் புரிந்து கொள்ளும் வகையில் போதுமான அளவில் இருக்கவேண்டும். மிகச் சிறியதாகவோ அல்லது மிகப் பெரியதாகவோ இருக்கக் கூடாது.