தமிழ்த் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையான சான்ட்ரா தமிழில் கதாநாயகியாக நடித்துள்ள 'சிவப்பு எனக்கு பிடிக்கும்' படம்
விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அதேசமயம் சான்ட்ராவுக்கு இந்திப் படத்தில் அறிமுக வாய்ப்பொன்று கிடைத்துள்ளது. டைரக்டர் அந்தோணி டிசோசாவின் இயக்கத்தில் இம்ரான் ஹஷ்மியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய பட வாய்ப்பு பற்றி சான்ட்ரா கூறுகையில், “இம்ரானைக் காதலிப்பவளாக நான் இந்தப் படத்தில் தோன்றுகிறேன். என்னுடைய புகைப்படங்களைப் பார்த்த டைரக்டர் அந்தோணி நான் இந்த கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவளாக இருப்பேன் என்று தேர்ந்தெடுத்துள்ளார். நான் சில காட்சிகளில் மட்டும் இதில் தோன்றினாலும் பாலிவுட்டில் நுழைவது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்” என்று குறிப்பிட்டார்.
இம்ரான் ஹஷ்மியுடனான ஒரு முத்தக் காட்சியும் இதில் இடம்பெறுவதாக சான்ட்ரா கூறினார். ஹீரோவைக் காதலிப்பதால் இந்தக் காட்சி கதைக்குத் தேவைப்படுகின்றது. இதனை செய்யமுடியும் என்று நம்புகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார். சமீரா ரெட்டி ஹீரோயினாக நடிக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக