தூரிகை நாயகி ஹன்சிகா கலக்கல் பேட்டி

தென்னிந்திய இளைஞர்களின் இதயங்களில் காதல் ஓவியமாக பதிந்திருப்பவர் நடிகை ஹன்சிகா. இந்த காதல் ஓவியமே ஓர் ஓவியர் என்பது நிறைய
பேருக்கு தெரியாத ரகசியம். ஹன்சிகா மிகச்சிறந்த ஓவியர். ஓய்வு கிடைத்தால் போதும் தூரிகையும் கையுமாக உட்கார்ந்து விடுகிறார். இவர் வரைந்த ஓவியங்கள் மும்மையில் உள்ள அவருடைய வீட்டை அலங்கரிக்கின்றன. 

ஓவியர் ஆனது எப்படி? என்ற கேள்விக்கு ஹன்சிகா உற்சாகமாக அளித்த பேட்டி:- 

குழந்தை பருவத்தில் இருந்தே எனக்கு ஓவியங்கள் மீது மிகுந்த ஈடுபாடு. ஏழு வயதில் நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, முதன்முதலாக பெயிண்டிங் பண்ண ஆரம்பித்தேன். 

நான் முதன்முதலாக வரைந்த ஓவியம், ஒரு சிங்கம். அழகாக வரைந்து இருக்கிறேன் என்று என் குடும்பத்தினர் அனைவரும் பாரட்டினார்கள். அந்த பாராட்டுதான் என்னை தொடர்ந்து ஓவியங்கள் வரைய தூண்டியது. இதற்காக ஓவியப் பள்ளிக்குப் போய் படிக்கவில்லை. விரும்பியதை எல்லாம் வரைய ஆரம்பித்தேன். 

நடிப்பை என் தொழிலாகவும், ஓவியம் வரைவதை பொழுதுபோக்காகவும் வைத்து இருக்கிறேன். சினிமாவில் பிசியான பிறகு வரைவதற்கு நேரம் கிடைப்பதில்லை. அபூர்வமாக ஓய்வு கிடைக்கிறது. அந்த சமயங்களில் பெயிண்டிங் வேலையில் ஈடுபடுகிறேன். 

ஓவியங்கள் வரைவது எனக்கு ஆத்ம திருப்தியை அளிக்கிறது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து இருக்கிறேன். சிவன், பார்வதி, கிருஷ்ணா, விநாயகர் என பல கடவுள்களின் படங்களை வரைந்து இருக்கிறேன். 

நான் வரைந்த ஓவியங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஓவியம், விநாயகர். என் ஓவியங்களை ஒரு கண்காட்சியாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பது நீண்டகால ஆசை. அதன் மூலம் கிடைக்கும் பணத்தை மார்பக புற்று நோயாளிகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் கொடுக்க முடிவு செய்து இருக்கிறேன். 

எனக்கு சூர்யாவுடனும், கார்த்தியுடனும் நல்ல நட்பு இருக்கிறது. அவங்க அப்பா சிவகுமாரை பார்த்தது இல்லை. அவர் மிக சிறந்த ஓவியர் என்று நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். நான் வரைந்த ஓவியங்களை அவரிடம் காண்பித்து ஆசி பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என் ஆசை, மிக விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன். 

இவ்வாறு ஹன்சிகா கூறினார். 

பிரபலமான நடிகையாக இருந்தாலும் 25 குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பதோடு ஓவியம் வரைவதிலும் ஆர்வமாக இருக்கும் ஹன்சிகா வித்தியாசமானவர்தான்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget