'ஐ' படம் பற்றிய எதிர்பார்ப்பு அந்தப் படத்தின் டீஸர் வெளியானவுடனும், ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் வந்து இசை வெளியீட்டில் கலந்து கொண்ட பிறகும்
சர்ரென உச்சத்திற்குப் போனது. இந்தியத் திரையுலகில் எந்தத் திரைப்படமும் சாதிக்காத ஒரு சாதனையாக ஒரு வாரத்திற்கு முன் யு டியூபில் வெளியான 'ஐ' படத்தின் டீஸர் அதற்குள்ளாகவே 57 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது. தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகிலும், ஹாலிவுட்டிலும் கூட படத்தைப் பற்றி ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாகவே 'ஐ' படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை சுமார் 30 கோடி வரை விலை பேசப்படுவதாகத் தகவல் வெளியானது. இசை வெளியீட்டிற்குப் பிறகு நடைபெற்ற வர்த்தகப் பேச்சில் அந்த உரிமை சுமார் 33 கோடி வரை விற்கப்பட்டுள்ளதாக டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தை வாங்க தெலுங்குத் தயாரிப்பாளர்களிடையே கடும் போட்டி நிலவியதாம். கடைசியாக மெகா சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் திருப்பதி பிரசாத் ஆகியோர் இணைந்து 'ஐ' படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கியிருக்கிறார்களாம். தெலுங்குத் திரையுலக வரலாற்றில் இதுவரை எந்த ஒரு டப்பிங் படமும் இந்த அளவிற்கு விற்கப்பட்டதில்லை என்கிறார்கள். மற்ற மொழி உரிமைகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருதாகவும் சொல்கிறார்கள்.

கருத்துரையிடுக