ஆப்பிள் வரலாறு உங்களுக்கு தெரியுமா

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் வெளியாகியுள்ள இந்நிலையில், மொபைல் போன்
இயக்க வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்த ஐபோன் உருவான வரலாற்றை இங்கு காணலாம்.

ஐபோன் தொடக்கம் ஜனவரி 9, 2007: ஆண்டுதோறும் நடக்கும், மேக்வேர்ல்ட் கருத்தரங்கில், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், முற்றிலும் புதிய ஐபோன், அகலத்திரையுடன் கூடிய ஐபாட் மற்றும் இணைய இணைப்பில் புதிய வழி என மூன்று விஷயங்களை அறிமுகப்படுத்தினார். இன்றைய நிலையில் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட் போனுக்கு அன்று விதையிடப்பட்டது. இந்த போன் ஜூன் 29, 2-007ல் வெளியானது. பல மணி நேரம் காத்திருந்து மக்கள் இதனைப் பெற்றுச் சென்றனர். இது அறிமுகமாகி 74 நாட்கள் கழித்து, பத்து லட்சம் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டதாக, ஆப்பிள் அறிவித்தது. 

ஆண்ட்ராய்ட் போட்டி: ஐபோன் அறிமுகமாகி 15 மாதங்கள் கழித்து, இதற்குப் போட்டியாக, முதல் ஆண்ட்ராய்ட் போன் அறிமுகமானது. எச்.டி.சி. ட்ரீம் என இது அழைக்கப்பட்டது.

பிரச்னை 2010: ஆப்பிள் நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலை செய்ததை அடுத்து, ஊழியர் பாதுகாப்பு பிரச்னை ஏற்பட்டது.

மல்ட்டி டாஸ்க், ஜூன் 21, 2-010: ஐ.ஓ.எஸ்.4 சிஸ்டம், ஐபோனுக்கு ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்கள் இயக்கும் திறனை அளித்தது. 

டெவலப்பர் வருத்தமும் மகிழ்ச்சியும்: தன்னுடைய Objective-C கம்ப்யூட்டர் மொழியில் உருவாக்கப்படும் புரோகிராம்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என ஆப்பிள் அறிவித்தது. இதனால், பல புரோகிராம் டெவலப்பர்கள் அதிர்ச்சியுற்றனர். சில மாதங்கள் கழித்து, இந்த நிபந்தனை தளர்த்தப்பட்டதால், அதிகமான எண்ணிக்கையில் ஐபோனுக்கான அப்ளிகேஷன்கள் கிடைத்தன.

காப்புரிமை வழக்கு, ஏப்ரல் 15, 2011: சாம்சங் தன் தொழில்நுட்பத்தினைத் திருடிப் பயன்படுத்துவதாக ஆப்பிள் வழக்கு தொடுத்தது. பின்னர் ஒப்பந்த அடிப்படையில் வழக்கு திரும்பப் பெறப்பட்டது. 

ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்: 2011, அக்டோபர் 5ல், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார். அவருக்குப் பின் பொறுப்பேற்ற டிம் குக், ஐபோன் போல, டிஜிட்டல் உலகில் முழுமையான மாற்றத்தினை ஏற்படுத்தக் கூடிய சாதனம் ஒன்றை வடிவமைக்கும் சவாலை எதிர்கொண்டார்.

அதிர்ஷ்டம் தந்த ஐ.ஓ.எஸ்.7: செப்டம்பர் 18, 2013ல், ஐ.ஓ.எஸ்.7 சிஸ்டம் வெளியாகி, பல புதிய மாற்றங்களையும் வசதிகளையும் தந்தது. இதனைத் தொடர்ந்து ஐபோன் 5 எஸ், ஐபோன் 5சி வெளியாகின. விற்பனைக்கு வந்த 3 நாட்களில், 90 லட்சம் போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக ஆப்பிள் அறிவித்தது.

இன்றைய நிலை: ஸ்மார்ட் போன் பயன்பாட்டில், ஆண்ட்ராய்ட் சாதனங்களே மிக அதிகமாக இயங்கி வருகின்றன. உலக அளவில் 84.7% ஆக உள்ளது. ஐ.ஓ.எஸ். 11.7% மற்றும் விண்டோஸ் போன் 2.5% ஆக உள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால், ஸ்மார்ட் போன் விற்பனையில் அதிக லாபம் ஈட்டுவது ஆப்பிள் போன்களே.

இன்றைய சூழ்நிலையைச் சந்தித்து, விற்பனையில் முதல் இடம் பிடிக்க ஆப்பிள் நிறுவனம் தன் விற்பனைக் கொள்கையில் அதிக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதுள்ளது. அதிக மொபைல் போன் பயன்பாடு மேற்கொள்ளப்படும் ஆசிய பசிபிக் நாடுகளில், விலை குறைந்த ஆண்ட்ராய்ட மாடல்கள் பெருகி வருகின்றன. இவற்றுடன், என்றும் அதிக விலையில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள், போட்டியில் பங்கேற்க இயலவில்லை. புதிய ஐ.ஓ.எஸ்.8 சிஸ்டம், வீடுகளில் ஆப்பிள் சாதனங்கள் பயன்பாட்டை முன்னிறுத்தி பல வசதிகளைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ஆப்பிள், ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கு ஒரு சவாலாய் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget