பாலிவுட் குயின் கத்ரீனா கைப்

பாலிவுட்டின் அழகு மற்றும் செக்ஸியான நடிகை கத்ரீனா கைப். இவரும் பாலிவுட்டின் இளம் நடிகரான ரன்பீர் கபூரும் காதலித்து வருகின்றனர்.
சமீபத்தில் ரன்பீர்-கத்ரீனா பற்றி ரன்பீரின் உறவு பெண்ணும், நடிகையுமான கரீனா கபூர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் இவர்களது உறவுப்பற்றி ரன்பீரின் சகோதரியான ரித்திமா கபூரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, கத்ரீனா மிகவும் அழகான பெண், கத்ரீனாவை சந்தித்து இருக்கிறேன், ஆனால் அதற்கு மேல் அவர்களை பற்றி தெரியாது என்றார்.

ரன்பீரும், கத்ரீனாவும் 2015ம் ஆண்டில் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வருகிறதே என்று கேட்டபோது, அதைப்பற்றி தெரியவில்லை என்றார். மேலும் தனது சகோதரர் ரன்பீர் பற்றி ரித்திமா பேசுகையில், ரன்பீரை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். நாங்கள் இருவரும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்வோம், எல்லோரிடம் அவன் மிகவும் அன்பு செலுத்தும் குணம் உடையவன், சிறு விஷயத்திற்காக சிறுபிள்ளைத்தனமாக நாங்கள் சண்டை போட்டுள்ளோம், ஆனால் நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அவ்வளவு அன்பு வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget