தமிழ், தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் ஹன்சிகா தமிழ், தெலுங்குப் படங்களில் நடிப்பதே போதும் என
முடிவெடுத்துள்ளாராம். ஹிந்தித் தொலைக்காட்சித் தொடர்களில்தான் அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 'தேசமுதுரு' என்ற தெலுங்குப் படம் மூலம்தான் 2007ம் ஆண்டு நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து சில தெலுங்கு, ஹிந்தி, ஒரு கன்னடப் படம் என நடித்தவர் 2011ல்தான் தனுஷ் ஜோடியாக 'மாப்பிள்ளை' படம் மூலம் அறிமுகமானார்.
தற்போது தமிழில் அதிகப் படங்களில் நடிக்கும் நாயகியாக இருப்பவர் ஹன்சிகா மட்டுமே. “அரண்மனை, மீகாமன், உயிரே உயிரே, வாலு, ரோமியோ ஜுலியட், ஆம்பள” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'அரண்மனை' விரைவில் வெளியாக உள்ளது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹன்சிகா ஹிந்திப்படங்களில் அதிகமாக நடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார். “தமிழ், தெலுங்கில் நடிப்பதற்கே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. ஹிந்தியில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. தெலுங்கில்தான் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தேன். இங்கு நல்ல நிலமையில் இருக்கும் போது, ஹிந்திப் படங்களில் நடிப்பது அவ்வளவு முக்கியமாக எனக்குத் தெரியவில்லை. எனக்கு அங்கிருந்தும் பல வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், எதற்கும் நான் சம்மதிக்கவில்லை. அனைத்திலும் சராசரியாக இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது,” என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக