வோடபோனில் புத்தம் புது வசதி

வோடஃபோன் இந்தியா நிறுவனம் ரயில்வேஸ் கேடரின் மற்றும் டூரிசம் கார்பொரேஷன் (ஐஆர்சிடிசி) நிறுவனத்தின் அதிகாரபூர்வ பங்குதாரர்
ஆன பாரத் பிபீஓவுடன் இணைந்து, வோடஃபோன் எம்பேசா கட்டண வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு மொபைல் மூலம் ஆன்லைனில் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் சேவையை அறிவித்துள்ளது. இந்த சேவையை வாடிக்கையாளர்கள் 139 எண் மூலம் ஆன்லைனில் ஈடிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். இதுகுறித்து, வோடஃபோன் இந்தியாவின் எம்பேசா வர்த்தக தலைவர் சுரேஷ் கூறுகையில், ‘ஈகாமர்சின் செயல் திறனையும், வசதியையும் விரிவுபடுத்தி வங்கியுடன் தொடர்பு இல்லாத லட்சக்கணக்கான மக்களுக்கு ஆன்லைன் சேவையை அளிக்க முடியும். ஆப் அடிப்படையிலான இந்த புதிய சலுகை எங்களது வாடிக்கையாளர்களுக்கு உதவும். அதன்படி, ஈடிக்கெட் களை முன்பதிவு செய்து அதன் நிலவரத்தை மொபை லில் அறியலாம்’ என்றார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget